நதியின் சுழற்சியில்
காகிதக் கப்பல்கள் காணாமல் போகும்..
வாசமுள்ள மலர்களோ..
நீரோட்டத்தில் நீந்திச் செல்லும்..
பாதைகள் மாறும்.. பயணங்கள் கடினம்..
கரணம் தப்பினால் மரணம்..
ஒவ்வொரு நொடியிலும்
காத்திருக்கும் ஆச்சரியங்கள்..
மேடு பள்ளங்கள் நிறைந்து..
நறுமலர்களோ இன்முகத்துடன்..
வாசமுள்ள மலர்களென்று..
நதியும் பாராது..
அடித்துச்செல்லும் தன் போக்கில்..
அழகு மலர்களோ..
இயல்பான குணத்துடன்
நதி முழுவதும் மணம் பரப்பும்..
குத்திக் கிழிக்கும்
இரக்கமற்ற கடும்பாறைகள் .
தேன் மலர்களோ.. மகிழ்வுடன்
கவலையில்லாமல் வழி நெடுக..
வண்ணங்களை தூவிச்செல்லும்..
பாவம் பார்க்காது..
ஆற்றுச்சுழல் கீழே இழுக்கும்..
மண்ணுக்குள் புதைத்திட..
மென் மலர்களோ.. தைரியத்துடன்
போராடி மிதந்தே செல்லும்..
காற்றும் விடாது..
அலைக்கழிக்கும்..
பயமற்ற பூவிதழ்களோ
கலங்காது படகாய்ப்
பாய்ந்துச் செல்லும்..
அழகிழந்து.. உருக்குலைந்து..
கரை ஒதுங்கும்.. கடலில் சேரும்..
பனிமலர்களோ..
அமைதியாக நிம்மதியுடன்
ஏற்றுக்கொள்ளும்
விட்டுச்சென்ற தடயங்களை
எண்ணியே..
மூச்சுள்ளவரை
முயற்சிகளைக் கைவிடாத
#வாசனை மலர்கள்..
– சாரதா கண்ணன் @ ஹைதராபாத்
அவலபெண்களின் நிலையை குறிக்கிறது
வாசனை மலர்களை அருமையாகத் தொடுத்துள்ளீர்கள். என் உளமார்ந்த வாழ்த்துக்கள்
வணக்கம் சகோதரி.பூவின் பயணம் வாசம்.
நல்ல மனித உள்ளங்களும் எவ்வளவு இடர்பாடுகள் வந்தாலும் தான் கொண்டுள்ள நற்செயல்களை…தொடர்ந்து கொண்டே இருப்பார்கள்.
அருமை..வாழ்க வளமுடன்.