தரையில் துடிக்கும்
மீன்களாய்..
கரையில் தவிக்கும்
மீனவர்கள்..

உலகில் இதுபோல்
கண்டதில்லை..
உழைப்பவர் வலியை
உணரவில்லை..

இறந்த உறவுகளை
பார்க்கவில்லை..
பிழைத்தவர் யாரென
தெரியவில்லை..

உணவும் உடையும்
கிடைக்கவில்லை..
ஊர்ப்போய் சேர வழி
தெரியவில்லை..

நடுக்கடலில் உறவுகள்
தத்தளித்தும்
கோட்டையின் கதவுகள்
திறக்கவில்லை..

படகுகளில் மீன்கள்
அழுகுகின்றன..
சடலங்கள் கடலில்
கரைகின்றன..

குளிரில் உடல்கள்
நடுங்குகின்றன..
குஜராத் மண்ணில்
நமது மீனவர்கள். .

ஒக்கி புயல் கடலைப்
புரட்டியது..
வீதியில் மீனவ சமுதாயத்தை
விரட்டியது..

போர்க்கால நடவடிக்கை
எடுத்திடல் வேண்டும்..
கோரப் பிடியிலிருந்து மக்களை
காத்திடல் வேண்டும்..

வாரவலில் கரை சேர்ந்த
தமிழர்களை
பாராமல் ஒதுக்குவதும்..
ஒதுங்குவதும் முறையாமோ..?!

மீனவர் ஒற்றுமை மேலிடம்
அறியவில்லை..
கடலை ஆளும் வீரர்களாம்..
கடலன்னையின் மைந்தர்கள்..
கண்ணீர் கடலில் கரையலாமா..??

தாலிகள் இந்தி படித்தாலும்
பரவாயில்லை..
இறங்காமல் பார்த்துக்
கொள்ளுங்கள்..

மீனவ சகோதரர்களுக்காக
அன்புச் சகோதரி..

                        -சாரதா க. சந்தோஷ்