திருஞானசம்பந்தன் என்ற இயற்பெயர் கொண்ட பேராசிரியர் நன்னன்  கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள சாத்துக்குடல் எனும் ஊரில் 1924-ம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி பிறந்தார். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர்.

ஆசிரியப் பணியைத் தொடக்கப் பள்ளி ஆசிரியராகத் தொடங்கிய நன்னன் உயர்நிலைப்பள்ளி, பயிற்சிக் கல்லூரி, கலைக்கல்லூரி மற்றும் சென்னை மாநிலக் கல்லூரியில் பேராசிரியராகவும் பணிபுரிந்துள்ளார்.

வெள்ளையனே வெளியேறு, இந்தி எதிர்ப்பு உள்ளிட்ட பேராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றுள்ளார். மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி, பின் தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநராகவும் பணியாற்றியவர்.

எழுத்தறிவித்தலில் ‘நன்னன் முறை’ என்ற புதிய முறையையே உருவாக்கியவர். தமிழ் இணையப் பல்கலைக்கழக வாயிலாக இவர் கற்றுக்கொடுத்த முறையை கோலாலம்பூர், லண்டனில் உள்ள தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின. சென்னைத் தொலைக்காட்சியில் ‘எண்ணும் எழுத்தும்’ என்ற தலைப்பில் 17 ஆண்டுகள் தமிழ் கற்பித்தார்.

அதில் ‘உங்களுக்காக’ என்ற தொடரில் 60-க்கும் மேற்பட்ட குறு நாடகங்களை எழுதி, இயக்கியதோடு நடித்தும் உள்ளார். கட்டுரை கள், ஆய்வுக் கருத்தரங்கக் கட்டுரைகள், பாடநூல்கள், துணைப்பாட நூல்கள் என நிறைய எழுதியுள்ளார். 1990 – 2010-க்கு இடைப்பட்ட காலத்தில் சுமார் 70 நூல்களை எழுதினார்.

‘உரைநடையா? குறைநடையா?’, ‘எல்லார்க்கும் தமிழ்’, ‘தவறின்றி தமிழ் எழுதுவோம்’, ‘திருக்குறள் மூலமும் விளக்க உரையும்’, ‘பைந்தமிழுரைநடை நைந்திடலாமா?’, ‘வாழ்வியல் கட்டுரைகள்’, ‘தமிழ் எழுத்தறிவோம்’, ‘கல்விக் கழகு கசடற எழுதுதல்’ உள்ளிட்ட இவரது நூல்கள் குறிப்பிடத்தக்கவை. பெரியாரின் கொள்கைகளில் பற்று கொண்டிருந்த இவர், அதைக் குறித்தும் பல நூல்களை எழுதியுள்ளார்.

தமிழ் கட்டுரை, பாடநூல்கள் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி உள்ளார். அவர் எழுதிய நூல்களில் பெரும்பாலான நூல்கள் பெரியார் கொள்கைகள் சார்ந்த நூல்கள் ஆகும். பெரியார் விருது, தமிழ்ச் செம்மல் விருது, திரு.வி.க.விருது போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார்.

முதுமை காரணமாக சென்னை சைதாப்பேட்டையில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்து வந்த மா.நன்னன் தனது 94வது வயதில் 07/11/2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

நன்னன் எழுதி வெளிவந்த நூல்கள்:

– இவர்தாம் பெரியார் 3 சுயமரியாதை – 2012 ஏப்ரல்
– இவர்தாம் பெரியார் 1 . தோற்றம் (வரலாறு) – 2001 செப்டம்பர்
– இவர்தாம் பெரியார் 2 . போர் (வரலாறு) – 2001 அக்டோபர்
– உரைநடையா? குறை நடையா? (மூன்றாம் பதிப்பு)
– எல்லார்க்குந் தமிழ் – 1985 (குறிப்பு – ஆங்கிலமொழியை அறிந்தோர் ஆசிரியர் ஒருவரின் உதவியின்றி தாமே தமிழைப் படிக்கவும், எழுதவும் பெரும் அளவுக்கு உதவும் நோக்கத்தோடு இச்சிறுநூல் உருவாக்கப்பட்டது.)
– எழுதுகோலா? கன்னக்கோலா? – 2008 சூலை
– கல்விக் கழகு கசடற எழுதுதல் – 2005 சூன்
– கெடுவது காட்டுங் குறி – 2009 சூலை
– கையடக்க நூல்கள்
– சும்மா இருக்க முடியவில்லை – 2012 ஏப்ரல்
– செந்தமிழா? கொடுந்தமிழா?
– செந்தமிழைச் செத்த மொழியாக்கிவிடாதீர்
– தடம் புரள்கிறதா தமிழ் உரைநடை
– தமிழ் உரைநடை போகிற போக்கு.., – 2003 அக்டோபர்
– தமிழ் எழுத்தறிவோம்
– தமிழியல் – தொல், எழுத்தும் சொல்லும் தொடருடன் – 2012 ஏப்ரல்
தமிழைத் தமிழாக்குவோம் – 1
– தமிழைத் தமிழாக்குவோம் – 2
– தமிழைத் தமிழாக்குவோம் – 2
– தவறின்றித் தமிழ் எழுதுவோம் தவறின்றித் தமிழ் எழுதுவோம் (வழுக்குத் தமிழ்)
– தளர்ச்சியின் கிளர்ச்சி பாகம் 1
– தளர்ச்சியின் கிளர்ச்சி பாகம் 2
– திருக்குறள் மூலமும் விளக்க உரையும் – 2012 ஏப்ரல்
– தொல் – பேராசிரியர் உரைத்திறன் – 2012 ஏப்ரல்
– நல்ல உரைநடை எழுத வேண்டுமா? – திறனாய்வும் தீர்ப்பும்
– நல்ல உரைநடை எழுத வேண்டுமா? (மூன்றாம் பதிப்பு)
– நன்னன் கட்டுரைகள்
– புதுக்கப்பட்ட பதிப்புகள்
– பெரியார் கணினி (இரு தொகுதிகள்)
– பெரியார் பதிற்றுப் பத்து – 2007 சனவரி
– பெரியாரடங்கல் – 2004 மே
– பெரியாரியல் 1 . பொருள் – 1993
– பெரியாரியல் 2 . மொழி – 1993 செப்டம்பர்
– பெரியாரியல் 3 . இலக்கியம் – 1993 செப்டம்பர்
– பெரியாரியல் 4 . கலை – 1993 திசம்பர்
– பெரியாரியல் 5 . தாம் – 1994 ஏப்பிரல்
– பெரியாரியல் 6 . கல்வி – 1996 ஆகசுடு
– பெரியாரியல் 7 . ஒழுக்கம் – 1997 அக்டோபர்
– பெரியாரியல் 8 . திருமணம் – 1998 செப்டம்பர்
– பெரியாரியல் 9 . கடவுள் – 1998 சூலை
– பெரியாரியல் 10 . மதம் – 1998 சூலை
– பெரியாரியல் 11 . பார்ப்பனியம் – 2000 ஆகசுடு
– பெரியாரியல் 12 . சாதி – 2000 சூலை
– பெரியாரியல் 13 . அரசியல் – 2002 அக்டோபர்
– பெரியாரியல் 14 . சுயமரியாதை – 2003 அக்டோபர்
– பெரியாரியல் 15 . பகுத்தறிவு – 2004 திசம்பர்
– பெரியாரியல் 16 . கட்சிகள் – 2004 திசம்பர்
– பெரியாரியல் 17 . வாழ்க்கை – 2004 திசம்பர்
– பெரியாரியல் 18 . மனிதன் – 2005 சூலை
– பெரியாரியல் 19 . தொழிலாளர் – 2005 சூலை
– பெரியாரியல் – தாம் பெரியாரின் உவமைகள்
– பெரியாரின் உவமைகள் – 1998 ஆகசுடு
– பெரியாரின் குட்டிக் கதைகள்
– பெரியாரின் குட்டிக்கதைகள் – 1998 ஆகஸ்ட்
– பெரியாரின் பழமொழிகள்
– பெரியாரின் பழமொழிகள் – 1998 ஆகஸ்ட்
– பெரியாரின் புத்துலகு
– பெரியாரின் புத்துலகு
– பெரியாரைக் கேளுங்கள்
– பெரியாரைக் கேளுங்கள் – 24 குறுமங்கள்
– பெரியாரைக் கேளுங்கள் (தொகுப்பு)
– பைந்தமிழுரைநடை நைந்திடலாமா? – 2006 சூலை
– வாழ்வியல் கட்டுரைகள் உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *