கருங்கல் ஒன்று சிற்பமாவது சாதாரண விஷயமல்ல.

கல்லை தேர்ந்தெடுப்பதில் தொடங்கி, கற்சிற்பம் உருவாவது வரை ஏகப்பட்ட சாஸ்திரங்களை முன்னோர்கள் உருவாக்கி வைத்துள்ளார்கள்.

சிலைக்கே ஏகப்பட்ட விதிகள் என்றால், வழிபடக்கூடிய மூலவராக உருவாகும் கற்சிற்பம் வடித்தவுடன் அப்படியே கொண்டு போய் பிரதிஷ்டை செய்து விட முடியாது. அறிவியலும் ஆன்மிகமும் பின்னிப்பிணைந்த பல வழிமுறைகளை கடைப்பிடித்து சிலைக்கு கடவுள் அந்தஸ்தை ஏற்றுகிறார்கள்.

ஜலவாசம் :

நீரில் புதிதாக உருவாக்கப்பட்ட சிலையை ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் அமிழ்த்தி வைக்க வேண்டும்.

ஜலவாசத்தில் இருக்கும் சிலை குளிர்ந்து உறுதியாக உருவாகும்.

அறிவியல் படி ஜலவாசத்தில் 48 நாட்கள் இருக்கும் சிலையில் ஏதேனும் ஓட்டைகள், மெல்லிய பிளவுகள் இருந்தால் நீர் அதனுள் நுழைந்து விடும். நுழையும் நீர் குமிழிகளை வெளியே விடும்.

குறைவுபட்ட சிலையை ஆரம்ப நிலையிலேயே தடுத்து விடும் வழிமுறை தான் ஜலவாசம்.

தான்ய வாசம் :

48 நாள்கள் நீரில் ஊறிய சிலையை எடுத்து அடுத்ததாக தான்ய வாசத்தில் வைக்கிறார்கள்.  அதாவது சிலை மூழ்கும் அளவுக்கு நவதானியங்களை கொட்டி வைக்கிறார்கள்.

48 நாட்கள் நவ தானியங்களோடு பொன், வெள்ளி  சேர்த்தே இந்த வாசம் நடத்தப்படுகிறது.

வஸ்திர வாசம் :

பட்டாடைகளில் கடவுள் சிலை வாசம் செய்யும்.

சயன வாசம் :

சயன வாசத்தில் கடவுள் சிலை  படுக்கையில் கடவுள் சிலை வைக்கப்பட்டு பாதுகாக்கப்படும். ஏன் இந்த தான்ய வாசம் என்று தானே கேட்கிறீர்கள்.

நீரில் ஊறி ஏதாவது ஓட்டை, விரிசல் இருந்தால் காட்டும் ஜலவாசம் தாண்டியும் ஏதேனும் குற்றம் குறை சிலையில் இருந்தால் அதை தான்ய வாசம் சுட்டிக்காட்டி விடும். நவதானியத்தில் இருந்து வெளியாகும் வெவ்வேறு விதமான வெப்பம் சிலையை தாக்கும்.

48 நாட்கள் இந்த வெப்பத்தில் இருக்கும் சிலையில் ஏதேனும் வலிமையற்ற பகுதிகள் இருந்தால் அவை உடைந்து விடும். தேரை போன்ற பாதிப்பு கொண்ட சிலை என்றால் இந்த வாசத்தில் உடைந்து சிலையின் குற்றத்தை காட்டிக்கொடுத்து விடும்.

அதாவது ஜலவாசம், தான்ய வாசத்தில் சிலைகளின் குற்றம் குறைகள் தெரிந்து விடும். தெய்வசிலைகளின் கண்கள், பிரதிஷ்டை செய்யப்போகும் இரண்டு நாளுக்கு முன்னர் தான் திறக்கப்படும். சயன வாசத்தில் சிலையின் கிடைமட்ட வடிவம் சோதிக்கப்படுகிறது.

பிறகு  ஸ்தபதியால் தங்க ஊசி கொண்டு கண்ணில் மெல்லிய கீறலால் கருவிழி திறக்கப்படுகிறது. இவ்வாறு பல்வேறு அறிவியல், ஆன்மிக வழிமுறைகளின்படி தான் கல், கடவுளாக மாறுகிறது” .

கல்லை வடித்து பொதுவில் வைத்தால் அது சிலை. அதுவே புனித வழிகளால் மேம்படுத்தப்பட்டால் அது நாம் வணங்கும் கடவுளாக மாறுகிறது.

மனிதனும் அப்படித்தான், பல்வேறு பக்குவங்களை அடைந்தால் தான் அவனும் வணங்கத்தக்கவனாக மாறுவான் என்பதை தான் இந்த வழிமுறைகள் காட்டுகின்றன போலும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *